எல்லையறு இறையேற்றமுறு துணை வேண்டியெம் வாழ்த்துரைத்தோம்
நல்லருள் பாளித்து நலமுடன் காத்திடு நாயனே யா-அல்லாஹ்
வல்லவன் நீயே வளமுடன் கல்வியை வழங்கிடு யா-அல்லாஹ்
( எல்லையறு )
அமரர் பணியும் அளவுக்கு அறிவை ஆதத்துக்களித்தாயே
அது போல் எமக்கும் அகிலம் பணியும் அறிவைத் தா அல்லாஹ்
இக்ரஃ என்று இறைத்தூதருக்கு ஏகிய இறையோனே
ஈருலகெங்கும் ஏற்றம் காணும் அறிவைத் தா அல்லாஹ்
( எல்லையறு )
அறிவுடன் ஈமான் அருங்குணப்பண்புகள் அனைத்தையும் தா அல்லாஹ்
அறிவினைப் பெருக்கி ஆற்றலை வளர்த்து அருள் புரிவாய் அல்லாஹ்
அறிவூட்டும் அதிபர் ஆசான்களுக்கு பணியும் பண்புடனே
நெறியுடன் வாழ்வை வளமுடன் ஆக்க வகை புரிவாய் அல்லாஹ்
( எல்லையறு )
இதயம் கவரும் பசுமை நிறையும் ஈலத்தின் மத்தியிலே
உதயமாகி அறிவொளி பரப்பும் “ஹிக்மா” கலைக்கூடம்
அகிலம் எங்கும் அறிவொளி பரப்ப வேண்டுமென நாங்கள்
இதயம் உருகி பிராரத்திக்கின்றோம் ஏற்றருள்வாய் அல்லாஹ்
( எல்லையறு )





